பிரயாக்ராஜில் கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை நடைபெற உள்ளது.இந்த விழாவில் 40 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று வட மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கும்பமேளா ஒரு துடிப்பான ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வு மற்றும் பல்வேறு சுற்றுலா இடங்களைக் கொண்டிருக்கும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கும்பமேளாவை சுமூகமாக நடத்த அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படும் என்று வட மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சஷிகாந்த் திரிபாதி தெரிவித்தார்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கு தேவையான ரயில்கள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக 10,000 வழக்கமான ரயில்கள் மற்றும் 3,000 சிறப்பு சேவைகள் உட்பட 13,000 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜுக்கு 700 மேளா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
200 முதல் 300 கி.மீ., தூரத்திற்கு சுமார் 1,800 குறுகிய தூர ரயில்கள் இயக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மொத்த மக்களின் எண்ணிக்கை 400 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஒத்திகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்து ஏற்பாடுகளும் சுமுகமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விழாவாகும்.