திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத யோஜனா என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தில் கிடைக்கும் வட்டியில் இருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாள் கூடம் மட்டுமின்றி திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விஷ்ணு நிவாசம், மாதவம் ஹோட்டல்களிலும் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு பக்தர்களும் தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்புவோர் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானமும் நன்கொடையாக ரூ.44 லட்சம். காலை உணவுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் செய்யலாம். மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு 17 லட்சம்.