ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து 48 சுற்றுலா தலங்களை மாநில அரசு மூடியுள்ளது. தற்போது காஷ்மீரில் 87 சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தூத் பத்ரி, சிந்தன் டாப் உள்ளிட்ட பகுதிகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள சுற்றுலா தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.