புது தில்லியில், உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 புதிய வழித்தடங்கள் தொடங்கப்படும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்தை விரிவுபடுத்துவதும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். விமானம் இல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்குவதற்கு மத்திய அரசு தனித்துவமான சலுகைகளை வழங்குகிறது.
இதன் மூலம் ஆண்டுக்கு 2.8 லட்சம் விமானங்கள் மூலம் 1.44 கோடி பயணிகள் பயனடையலாம். 2014ல் 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில் தற்போது 157 ஆக உயர்ந்துள்ளது.2047க்குள் 350 முதல் 400 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் இலக்கு.