குஜராத்: குஜராத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களுடைய பழைய காரை தகனம் செய்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அம்ரிலி மாவட்டத்தில் உள்ள பதுர்ஷிங்கா கிராமத்தில் வசிக்கும் சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள் பழமையான கார் வைத்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் அந்த காரை அதிர்ஷ்டமாக கருதி அதை பொக்கிஷமாக வைத்திருந்தனர். ஆனால், கார் பழையதாகிவிட்டதால், பயன்படுத்த முடியவில்லை. இந்நிலையில், காருக்கு பிரியாவிடை செய்வதற்காக இறந்தவருக்கு செய்யும் இறுதிச் சடங்குகளை போல்ரா குடும்பத்தினர் செய்துள்ளனர்.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இந்துக்களின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு ஒரு குழியில் புதைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்காக 4 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டதாகவும், இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்த போல்ரா, காரை அடக்கம் செய்த இடத்தில் மரக்கன்று நடத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.