வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனையடுத்து புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை காலை ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் உள்ள சில துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், பாம்பன், நாகப்பட்டினம், காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.