இந்தியாவின் 76வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்புத் திருநாளில், கூகுள் நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வன விலங்குகள் படத்துடன் டூடுலை வெளியிட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டூடுல், இந்தியாவின் பாரம்பரியத் தன்மையை காட்சிப்படுத்துகிறது.
இந்த டூடுலில், லடாக் பகுதியின் பாரம்பரிய உடையில் பனிச்சிறுத்தை ஒருவாறு காட்டப்பட்டுள்ளது. அதன் அருகில், இரண்டு காலில் நின்று இசைக்கருவியை வாசிக்கும் புலி காட்சியளிக்கின்றது. பாரம்பரிய உடையில் ஒரு மான் செல்கின்றது. மேலும், இசைக்கச்சேரிகள் நடைபெறும் புகைப்படமும் இதில் இடம் பெற்றுள்ளன.
கூகுள் அதன் வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு ஒரு அழகான மற்றும் கலைநயம் மிகுந்த டூடுலை வெளியிட்டிருப்பது, இந்திய கலாசாரத்தின் சிறப்பை உலகளவில் முன்னிறுத்தும் முயற்சியாகும்.