பெண்களின் தொப்புள் பகுதி ஒரு உயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்ககாலப் பெண்கள், தொப்புள் தெரியும்படி புடவைகளை அணிந்து வந்தனர். பிறகு தர்ம நூல்கள், இப்படி அணியக் கூடாது என்ற மரபை தோற்றுவித்ததும், இடுப்பை மறைத்தபடி பெரிய ஜாக்கெட், அதன் மேல் புடவை என பெண்கள் உடுத்த ஆரம்பித்தனர்.
புடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம். மகாராணி இந்திரா தேவி தான் டுபான் புடவைகளை அறிமுகம் செய்தார். இளம் வயதிலேயே விதவையான இவர், வெள்ளை புடவை மட்டுமே அணிந்து வந்தார். பிரான்சில் இருந்து இறக்குமதியான இந்தப் புடவை அழகான டிசைன்களுடன் காட்சியளித்தது.
டுபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில் காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர். திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. டிசைனிங் துறையும் வளர்ந்தது. இந்தி சினிமாதான் புடவைகளின் வகைகளை பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம்.
புடவையின் முன் பாதிதான் பாவாடை தாவணி. கவுன், பேண்ட், குட்டைப் பாவாடை எல்லாம் இன்றைய வடிவங்கள். ஆரம்பத்தில் பருவம் அடையும் வரை பெண்கள் பாவாடை, சட்டைதான் அணிந்து வந்தார்கள். பருவம் வந்த பிறகு பாவாடை, தாவணியானது. இன்று பாவாடை, லாங் ஸ்கர்ட், பிஸ்கட் ஸ்கர்ட், ஏ லைன் ஸ்கர்ட் என்று மாடர்னாக மாறியுள்ளது.
அதேபோல தாவணியும் ஸ்டோல், ஸ்கார்ப் என உருமாறியுள்ளது. மற்ற உடைகளை போல் பாவாடை தாவணியிலும் எம்பிராய்டரி, ஜமுக்கி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டெனிம் என்ற புடவை வகை, பார்க்க டெனிம் துணி போல் இருக்கும். ஆனால், பட்டுத் துணியால் நெய்யப்பட்ட புடவை இது. ரவிவர்மனின் ஓவியங்களை வைத்து உருவானது ஹம்ச தமயந்தி புடவை.
இடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கட்டுவது ‘ரிவர்சபிள் புடவை’. ஜாக்கெட்டிலும் புடவையிலுள்ள டிசைன்களை அமைத்ததால், அது ‘லிக்கொயட் ஜாகெட் காம்போ’ என்றழைக்கப்பட்டது. இதை கல்யாண கலெக்க்ஷான் என்றும் அழைக்கலாம்.