தமிழில் வாகா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்து பிரபலமான நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்திய வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா துறையில் சில சமயங்களில் பிரபலமான இந்த நடிகை, முழுநேர சினிமாவில் அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இந்தக் கைது அந்த முழு கர்நாடகா மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த தங்கம் கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. சுமோட்டோ வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது. இதனால், இதில் தொடர்புடைய முக்கிய நபர்கள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
14 கிலோ தங்கம் கடத்திய இந்த வழக்கில், நடிகை ரன்யா ராவிடம் இருந்து ரூ.17.29 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடகாவில் இத்தகைய குற்றச்சம்பவங்களில் நடிகைகள் கைது செய்யப்பட்டிருப்பது புதியதல்ல. போதைப்பொருள் பயன்பாடு, தங்கம் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களில் பல நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளன.