புதுடில்லி: பயணிகள் தேவை அதிகரித்துள்ளதால், ஏழு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
Contents

தற்போது இயக்கப்படும் வழித்தடங்கள்:
- மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல்
- செகந்திராபாத் – திருப்பதி
- சென்னை எழும்பூர் – திருநெல்வேலி
- மதுரை – பெங்களூரு கன்டோன்ட்மென்ட்
- தியோகர் – வாரணாசி
- ஹவுரா – ரூர்கேலா
- இந்தூர் – நாக்பூர்
இவ்வழித்தடங்களில் சில ரயில்கள் 8 பெட்டிகளுடன், சில ரயில்கள் 16 பெட்டிகளுடன் தற்போது இயங்கி வருகின்றன.
புதிய மாற்றங்கள்:
👉 16 பெட்டிகளுடன் இயங்கும் 3 வந்தே பாரத் ரயில்கள் இனி 20 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்.
👉 8 பெட்டிகளுடன் இயங்கும் 4 ரயில்கள் 16 பெட்டிகளாக அதிகரிக்கப்படும்.
இதன்படி,
- மங்களூரு – திருவனந்தபுரம்,
- செகந்திராபாத் – திருப்பதி,
- சென்னை – திருநெல்வேலி வழித்தடங்களில் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
மற்ற நான்கு வழித்தடங்களில் 16 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும்.
ரயில்வே தகவல் தொடர்பு இயக்குநர் திலிப் குமார் கூறுகையில்:
“ஜூலை 31 வரை பயணிகள் தேவை அதிகரித்ததால், பெட்டிகளை கூடுதலாக இணைக்க முடிவு செய்துள்ளோம். மேலும், பழைய ரயில்கள் பிற வழித்தடங்களில் இயக்கப்படும். 20 பெட்டிகள் கொண்ட புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கத் தயாராக உள்ளன,” என்றார்.