புதுடெல்லி: முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி (94) டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக உடல் நலக்குறைவால் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எல்.கே. அத்வானி மருத்துவ பரிசோதனைக்காக இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மூத்த நரம்பியல் நிபுணர் வினீத் சூரி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் உள்ளார். அத்வானியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.