புது டெல்லி: கடந்த மாதம் 12-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். சர்வதேச விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, விபத்து நடந்த 30 நாட்களுக்குள் இந்தியா விபத்து குறித்த முதல் அறிக்கையை வெளியிட வேண்டும்.

வெடிப்பு உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் தெரிவித்திருந்தார். விமான விபத்து குறித்த முழு அறிக்கை வெளியிட இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதற்கு முன், முதல் அறிக்கை 11-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.