சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிரிட்டன் பர்மிங்காம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்திலிருந்த பயணிகள் பல நிமிடங்கள் பதட்டத்துடன் இருந்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய பைலட்டுகள் அவசரமாக ரேம் ஏர் டர்பைன் (RAT) முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. எந்தவித உயிரிழப்பும் அல்லது பெரிய சேதமும் ஏற்படாதது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது.
இந்நிலையில், அதே விமானம் திரும்பி டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டது. இதனால் அடுத்த கட்ட பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். அவர்களுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விமானத்தில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதை குறித்து ஏர் இந்தியா மன்னிப்பு தெரிவித்து, எதிர்காலத்தில் இப்படியான கோளாறுகள் ஏற்படாமல் கவனிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.