இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவிய நிலையில், திடீரென இருநாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன. கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் நிலவிய போர்மயமான சூழ்நிலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீடு காரணமாக சமாதானம் கிடைத்தது.
இதனால் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி நிலைதிரும்பியுள்ளது.இந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலின் போது, “போர் என்பது இந்தியாவின் தேர்வு அல்ல” என்று அஜித் தோவல் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலுக்கு சீனா கண்டனம் தெரிவித்தது.சீனா, இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளது. இதனையடுத்து, மூன்று நாட்களாக தொடர்ந்த தாக்குதல்கள் தற்போது குறைந்துள்ளன. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை வீசியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளன. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தானின் கூற்று உண்மையல்ல என்றும் கூறியுள்ளார்.இந்த அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து நாடுகளிடையே தீவிர கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது பாதுகாப்பு நலன்கள் பாதிக்கப்படாத வகையில் உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த சூழ்நிலையில் அஜித் தோவலின் நிலைப்பாடு, இந்திய அரசின் உறுதியை வெளிப்படுத்துகிறது.