லக்னோ: ஆடைகள் மட்டும் ஒருவரை யோக்கியராக்கிவிடாது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். அப்போது புழக்கத்தில் இருந்த ₹500 மற்றும் ₹1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி அரசு திடீரென அறிவித்தது.
அப்போது உத்தரபிரதேசத்தில் பணம் மாற்ற வங்கி வாசலில் நின்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கஜாஞ்சி நாத் என்று பெயர் சூட்டப்பட்டது. குழந்தை கஜாஞ்சிநாத் தற்போது 8 வயது சிறுவனாக வளர்ந்துள்ளார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், தனது பிறந்தநாளை கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடி, சிறுவனுக்கு கட்சியின் சைக்கிள் சின்னத்தை பரிசாக வழங்கினார். பின்னர் அகிலேஷ் யாதவ், “உடைகளால் மட்டும் யோகியாக முடியாது. ஒருவரின் வார்த்தைகளும் செயலும் அவரை ஒரு புனிதர் ஆக்குகிறது.
தன்னை விட வேறு யாரும் பெரியவர் இல்லை என்று நினைப்பவர் எப்படி புனிதர் ஆக முடியும்? ஒரு துறவி குறைவாக பேசுகிறார். அந்த பேச்சும் பொது நலனுக்கானது. ஆனால் இங்கே எல்லாம் எதிர்மறையானது. என்கவுண்டருக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. அவர்கள் இருக்கையில் தங்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று முதல்வர் யோகியை மறைமுகமாகத் தாக்கினார்.