2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டிடத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல்.முருகன் ஆகியோர் தலைமையில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், டி.எம்.கே, சமாஜ்வாதி கட்சி, ஜேம்எம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னர், ஆர்எஸ்பி எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற செய்ய தேவையான ஒத்துழைப்பை வழங்க தயார், ஆனால் அரசுக்கு அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம். பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சினைகள் குறித்து நாம் பேசப்போகின்றோம்” என்று கூறினார்.
இந்த கூட்டம், ஜனவரி 31 அன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னதாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.