மகாகும்ப நகர்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறும் மகாகும்ப மேளா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான மகாகும்ப மேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் ஆன்மிக நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் 10.8 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் மகாகும்பமேளாவில் 73 வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் பங்கேற்று புனித நீராடுவார்கள் என கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இது தொடர்பாக அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி, நெதர்லாந்து, கேமரூன், கனடா, சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் உத்தரபிரதேச தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.