டெல்லி ஆட்சி மொழித் துறை பொன்விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரான மொழி அல்ல” என தெரிவித்துள்ளார். ஹிந்தி, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் நட்பு மொழியாக செயல்பட வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக்கூறிய அவர், அதுவே நமது கலாசாரத்தின் ஆதாரம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்வை தொடங்கி வைத்து, நினைவு பரிசும் பெற்ற அமித் ஷா, மேடையில் உரையாற்றினார். அவர், நான் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், வெளிநாட்டு மொழிகளையும் எதிர்ப்பது இல்லை என்றும், ஆனால் இந்திய மொழிகளை பெருமைப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
நாம் பெரும்பாலும் தாய்மொழியிலேயே சிந்திக்கிறோம், அதனால் அதன் மீது நம்மிடம் பெருமிதம் இருக்க வேண்டும். அடிமை மனப்பான்மையை விட்டுவிட்டு, தாய்மொழிக்கே முதலிடம் கொடுப்பது தான் கல்வி வளர்ச்சிக்கான அடிப்படை எனவும் கூறினார்.
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத் துறை அல்ல, அது நம் நாட்டின் ஆன்மா என்று கூறிய அமித் ஷா, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஜெய்இஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தற்போது 13 இந்திய மொழிகளில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், 95% மாணவர்கள் தங்களது தாய் மொழியையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியான விஷயமாக அமித் ஷா கூறினார்.
முந்தைய காலத்தில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மூலமாக மட்டுமே தேர்வுகளை எழுத முடிந்த நிலைமையை மத்திய அரசு முற்றிலும் மாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தி, அனைத்து மொழிகளுக்கும் தோழமை பார்வையில் இருக்க வேண்டும் என்றதும், நம் கலாசாரத்தை உயர்த்தும் வழி நமது இந்திய மொழிகளில்தான் உள்ளது என்றதும் அவர் உறுதியாகக் கூறினார்.
இதனுடன், ஆங்கிலத்தையே முன்னிறுத்தும் மனப்பான்மையை மாற்ற வேண்டியதையும், எதிர்காலத்தில் தாய்மொழியில் உரையாடுவதையே பெருமைப்படவேண்டும் என்றும் அவர் உரைக்கூறினார்.