சென்னை: சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேட்டியை பார்த்தேன். தெலுங்கானாவில் சூப்பர் ஸ்டார் ஆக போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். அல்லு அர்ஜுனை விட தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்று காட்டவே இப்படி செய்கிறார். அவர் தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் என்று நினைக்கிறார். இப்போதும் காங்கிரஸ் கட்சி சார்பில்தான் அவர் செயல்படுகிறார்.
அவரும் சினிமாவுக்குப் போய் நடிகன் என்று நிரூபித்து விட்டால், அதையே சண்டையாகக் கொள்ளலாம். ஆனால் ரேவந்த் ரெட்டி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறார். மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லு அர்ஜுன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பிறகும், அவரைத் துன்புறுத்துவதும், சட்டப் பேரவையில் அவரது பெயரைக் குறிப்பிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
தியேட்டருக்கு வந்தால் யாராவது இறந்துவிடுவார்கள் என்பது அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? இந்த விஷயத்தில் அவரை பலிகடா ஆக்குவது நல்லதல்ல. சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் அல்லு அர்ஜுன் விஷயத்தில் ரேவந்த் ரெட்டியின் பேச்சில் வெறுப்பு மட்டுமே தெரிகிறது. அவரது வார்த்தைகளில் நடுநிலை இல்லை,” என்றார் அண்ணாமலை.