தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக பாஜகவை வளர்க்க டெல்லி மேலிடம் பல முயற்சிகளை மேற்கொண்டது. குறிப்பாக தமிழிசை, எல்.முருகன் பல தலைவர்களை நியமித்து திமுக-அதிமுகவுக்கு டப் கொடுத்தது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையும் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்யத் தொடங்கினார்.
அண்ணாமலையின் அரசியல்
தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் பல பேட்டிகளையும் அறிக்கைகளையும் அளித்தார். கூட்டணி பலத்துடன் வெற்றி பெறலாம் என்று நினைக்கும் தலைவர்கள் மத்தியில் தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்க்க அண்ணாமலை நினைத்தார்.
அண்ணாமலை – திருச்சி சூர்யா
பா.ஜ.க தேசிய தலைமையும் அண்ணாமலை மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் முன்னாள் தலைவர் தமிழிசைக்கு பாஜக எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் அண்ணாமலையின் வலது கரமாக செயல்பட்டு வந்த திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு அரசியல் ஆர்வம் வந்தது எப்படி? அண்ணாமலை அரசியலுக்கு வரும் திட்டம் என்ன என யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
அண்ணாமலை அரசியல் ஆர்வம்
இதில் திருச்சி சூர்யா கூறுகையில், அண்ணாமலை ஐபிஎஸ் பயிற்சியின் போது அரசியல் ஆசை அவருக்கு எழுந்தது. அப்போது தன்னுடன் பணியாற்றியவர்களிடம் நான் சட்ட அமைச்சராக வருகிறேன், நீங்கள் எனக்கு சல்யூட் போடுங்கள் என்று கூறியதாக திருச்சி சூர்யா கூறினர் .
அடுத்து ஐ.பி.எஸ்., பதவியில் இருந்தபோதே அண்ணாமலை தே.மு.தி.க., தலைவராக இருந்த விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது தான் தேமுதிகவில் இணைய விரும்புவதாக விஜயகாந்திடம் அண்ணாமலை தெரிவித்தார்.
விஜயகாந்த் அறிவுரை:
இதையடுத்து, நீங்கள் நல்ல நிலையில் இருக்கிறீர்கள், நல்ல இடத்தை அடைந்துவிட்டீர்கள், இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு விஜயகாந்த் இரண்டு மணி நேரம் அறிவுரை வழங்கினார். நீங்கள் ஏற்கனவே ஆட்சியில் இருக்கிறீர்கள்.
பிரச்சனையில் வருபவர்களுக்கு உதவுங்கள், சட்டம் ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்று வீட்டு வாசலுக்கு வந்த விஜயகாந்த், அண்ணாமலையை காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து பாஜக மூத்த நிர்வாகி பி.எல்.சந்தோஷை தொடர்பு கொள்ள அண்ணாமலை ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர முடிவு செய்தார். அண்ணாமலை ராஜினாமா செய்து ஓராண்டு ஆகியும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
ஒரு வருடமாக அண்ணாமலையை சோதித்த பா.ஜ.க. ஒரு வருடம் சும்மா தான் இருந்தார் அண்ணாமலை. இதனையடுத்து தான் பாஜக மாநில துணை தலைவரை தொடர்ந்து தலைவராக பதவியை அண்ணாமலை அடைந்ததாக திருச்சி சூர்யா கூறியுள்ளார்.