மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆர்.ஜி. கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காவிட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அம்மாநில மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், செப்டம்பர், 10ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால், போராட்டம் தொடர்ந்ததால், மம்தா பானர்ஜி, டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால், அவரது அழைப்பை ஏற்க மறுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மம்தா பானர்ஜி, “முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார். பதவி பற்றி எனக்கு கவலை இல்லை, இந்த விஷயத்தில் எனக்கு நீதி வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்,” என்றார்.
அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது மாநில அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.