தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் எல்.எல்.பி.க்கு விண்ணப்பிப்பது குறித்த முக்கியத் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒருமுறை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூலை 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சிர்திரு சட்டப் பள்ளி ஆகியவற்றில் எல்.எல்.பி., 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளதை அடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.