பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக, காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, அங்கு பாதுகாப்பு படையினர் மிகுந்த அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி இன்று ஏப்ரல் 25 அன்று ஸ்ரீநகர் சென்றடைந்தார். அவர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் ராணுவத்தின் உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் வழங்கினர்.