புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜக செய்யும் தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா என்றும், மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பாஜக தலைவர்களின் நடைமுறையை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா என்றும் கேட்டுள்ளார்.
இந்த கடிதத்தில், பாஜகவின் செயல்பாடுகளை விமர்சித்துள்ள கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். தலித் சமூகத்தினரின் வாக்குகள் சரிவு, ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துவது போன்ற பிரச்னைகளை மேற்கோள் காட்டி ஆர்எஸ்எஸ்க்கு இந்த நடவடிக்கைகளில் நம்பிக்கை இருக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
இது போன்ற கேள்விகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக பொது விவாதத்தை உருவாக்கி அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக உள்ளது.