ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனால், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த தாக்குதலில் பங்கேற்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அடில் ஹூசேன் தோக்கர், அலி பாய் மற்றும் ஹஷிம் மூசா ஆகியோரின் விவரங்களை தெரிவித்தால் தலா ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் குறித்த தகவலை பெயர் குறிப்பிடாமல் வழங்க விரும்பும் நபர்களுக்கும் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
தற்போது காஷ்மீரில் பல இடங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.