பெங்களூரு மெட்ரோ ரயிலின் மூன்றாம் கட்டம், 2029 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில், டபுள் டெக்கர் மேல்வழித்தடம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இது ஒரு வழித்தடத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் இயங்குவதற்கும் மற்றொரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கும் இடமளிக்கும்.
ஃபேஸ் 3 திட்டத்தில் பின் வரும் முக்கிய வழித்தடங்கள் உள்ளன:
– ஆரஞ்சு லைன்: கெம்பபுரா – ஜே.பி. நகர் 4வது ஃபேஸ்
– சில்வர் லைன்: ஹொசஹள்ளி – கடமகெரே
– ரெட் லைன்: ஹெப்பாலா – சர்ஜாபூரா
மேலும், “டபுள் டெக்கர் பாலம்” அமைக்கும் திட்டம், சும்மானஹள்ளி கிராஸ் – கடபகெரே மற்றும் ஜே.பி.நகர் ஸ்டேஷன் – நாகரபவி இடங்களில் செயல்படும்.
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்துள்ளது, மற்றும் இவை விரைவில் முடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.