ஏர் இந்தியா விமானம் ஒன்று அதிகாலை 2 மணியளவில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்றது. விமானம் பறந்து கொண்டிருந்த போது நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது. அதன்பின், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விமானத்தை சோதனையிட்டதில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அனைத்து பயணிகளுக்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.