ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இன்று (ஆகஸ்ட் 18) காலை இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 7 மணியளவில் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சல், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அடியிலும் கழிவறைகளிலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “நீங்கள் அனைவரும் இரத்த வெள்ளத்தில் மூழ்கப் போகிறீர்கள். நீங்கள் இறக்கத் தகுதியானவர். இதன் பின்னணியில் ‘சிங் அண்ட் கல்டிஸ்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மற்றொரு மின்னஞ்சலில், “என்னிடம் மருத்துவமனை கட்டிடங்களில் வெடிகுண்டுகள் உள்ளன. நீங்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படுவீர்கள், உங்களில் ஒருவரும் தப்பிக்க மாட்டீர்கள். நான் என் வாழ்க்கையை வெறுத்ததால் கட்டிடத்தில் குண்டுகளை வைத்தேன். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் “பைஜ் மற்றும் நோரா” இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். படுக்கைகள், அலுவலகங்கள், கழிப்பறைகள் ஆகியவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேபோல், ஹரியானா மற்றும் நவி மும்பையில் உள்ள பல்வேறு வணிக மையங்களுக்கு (மால்கள்) நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையில் அவை வெறும் வதந்தி என தெரியவந்தது. அந்த வகையில் இதுவும் போலி மின்னஞ்சல் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மின்னஞ்சலை அனுப்பியது யார், யார் எங்கிருந்து அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.