கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் எந்த நேரத்திலும் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
தற்போது கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் எந்த நேரத்திலும் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 124 அடியில் 118 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு கூட கே.எஸ்.ஆர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு கூறியது. ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீரை திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.