மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதை அடுத்து சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஏப்ரல் 1, 2025 முதல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 2 ஆண்டுகள் அதிகரித்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் பரவியதையடுத்து, “இந்தத் தகவலில் உண்மையில்லை” என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது முற்றிலும் தவறானது என்றும், மத்திய அரசு இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போலியான தகவலை பரப்ப வேண்டாம் என்றும், உண்மைகளை சரிபார்க்காமல் தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசின் செய்தித் தகவல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.