திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு சமீபத்தில் ஆட்சிக்கு வந்தது. தற்போது ஆந்திராவுக்கு டெஸ்லா ஆலையை கொண்டு வரும் முயற்சியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் உடன் சந்திரபாபு நாயுடுவுக்கு பழைய நட்பு உள்ளது. இதன் அடிப்படையில் ஆந்திராவில் டெஸ்லா கார் தயாரிப்பு ஆலையை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
டெஸ்லா இறக்குமதி செய்யப்பட்ட கார்களை சேமிப்பதற்கு அதிக இடவசதியை வழங்குவதற்காக டெஸ்லாவை கொண்டுவர ஆந்திர அரசு முயற்சித்து வருகிறது. உற்பத்தி ஆலைகள் தொடர்பாக, ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம், விரிவான அறிக்கையைத் தயாரித்து, அனந்தபூர் மாவட்டத்தில் சந்திரபாபு ஆட்சியில் நிறுவப்பட்ட கியா கார் தொழில்துறையை உதாரணமாகக் காட்டி, டெஸ்லாவுடன் களத்தில் இறங்கியுள்ளது.