ஆந்திரா: ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும் என நேற்று முதல்வர் சந்திரபாபு தனது தொகுதி மக்களிடம் உறுதியளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாள் சுற்றுப்பயணமாக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சந்திரபாபு நாயுடு நேற்று குப்பம் வந்தார். அங்கு பேசிய அவர், “என்னை 9வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியதற்கு அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த 5 வருடத்தில் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன். 1994-2004 மற்றும் 2014-2019 வரை குப்பத்திற்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். வெளிவட்டச் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளை அமைத்தேன். இந்த ஆண்டே ஹந்த்ரி-நீவா கால்வாய் திட்டம் மூலம் குப்பத்திற்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வருவேன். குப்பாத்திகுவிமான நிலையம் விரைவில் வரும்.மாடு வளர்ப்பு திட்டம் கொண்டு வருகிறேன். இங்கு தினமும் 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.
கிராமங்களுக்கும் இணைய வசதி வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில் ஆற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும். இதன் மூலம் குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்,” என்றார்.