புதுடெல்லி: ஆந்திர முதல்வர் சண்டிபாபு நாயுடு டெல்லியில் இன்று (ஜூலை 04) பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். ஆந்திரா மாநிலத்துக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் நிதிச்சுமையில் தத்தளிக்கிறது.
ஆந்திர முதல்வர் சண்டிபாபு நாயுடு இன்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இருவரும் பல முக்கிய விஷயங்களை விவாதித்தனர். ஆந்திரா மாநிலத்துக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்தார். நாளை (ஜூலை 05) அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளார். தற்போது பாஜக தலைமையிலான டிஜே கூட்டணியில் சந்திரபாபு நாயுடு முக்கியமான தலைவராக உள்ளார். இதனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.