சென்னை: சென்னையை அடுத்த போரூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த பிரதாப் செல்வம் – சங்கீராணி தம்பதியின் மகள் பிரெஸ்லி ஷேக்கினா (13). இவர் அங்குள்ள வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிரெஸ்லிக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். ஓவியத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது லட்சியம். பிரதமர் மோடி மீது மிகுந்த பாசம் கொண்டவர் என்பதால், தனது 74-வது பிறந்தநாளில் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தை உருவாக்கி உலக சாதனை படைக்க நினைத்தார்.
இதற்காக பல நாட்கள் தொடர்ந்து பயிற்சி பெற்றார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 600 சதுர அடி பரப்பளவில் பள்ளி வளாகத்தில் 800 கிலோ சிறுதானியங்களைக் கொண்டு பிரமாண்டமாக பிரதமர் நரேந்திர மோடியின் படம் வரையப்பட்டது.
காலை 8.30 மணிக்கு வரைய ஆரம்பித்த அவர், இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் வரைந்து உலக சாதனை படைத்தார்.
தொடர்ந்து 12 மணி நேரம் வரைந்த மாணவர் பிரெஸ்லியின் இந்த மாபெரும் முயற்சி, மாணவர் சாதனை என்ற பிரிவின் கீழ் உலக சாதனையாக UNICO உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. உலக சாதனை படைத்த மாணவி பிரெஸ்லிக்கு நிறுவன இயக்குநர் ஆர்.சிவராமன் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
மேலும், பள்ளி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் ஆசிரியர்களும் பிரெஸ்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவி பிரெஸ்லிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.