புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
72 வயதான சீதாராம் யெச்சூரி சுவாசக் குழாய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை பல்துறை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நிமோனியா காய்ச்சல் காரணமாக சீதாராம் யெச்சூரி கடந்த மாதம் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டார். சமீபத்தில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
செப்டம்பர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் யெச்சூரி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் பொதுச் செயலர் தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது மூன்றாவது முறையாக பதவி வகிக்கிறார்.