பெங்களூரு: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
மறுநாள், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பாக பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதைக் கண்டித்து வருகின்றனர். இதற்கிடையில், சம்பவத்தில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. பெங்களூரு கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தின் போது, பெங்களூரு கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்.சி.பி நிர்வாகம் அறிவித்தது.