பெங்களூரு: கர்நாடகாவில் முடா வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தனது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு வழங்கிய நிலத்தை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளார்.
மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (முடா) சார்பில் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மைசூருவின் பெரிய விஜயநகரில் 14 வீடுகளை தனது மனைவி பார்வதிக்கு வாங்கித் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூடா வழக்கின் விசாரணையை எதிர்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. எனினும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும் தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் சூடுபிடித்திருப்பதை உணர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூடா ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை அவரது குடும்பத்தினர் நடத்தும் சித்தார்த்த விஹார் அறக்கட்டளைக்கு திரும்ப வழங்க முடிவு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பட்டியல் இட ஒதுக்கீடு அடிப்படையில் சித்தார்த்த விஹார் அறக்கட்டளைக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, இது சட்டவிரோதமானது என்றும், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் லோக்ஆயுக்தாவில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், சித்தார்த்த விஹார் அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என விளக்கமளித்தார்.