டெல்லி: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளமான 1xBet தொடர்பான மோசடி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்க இயக்குனரகம், நடிகர்கள் சோனு சூட், மிமி சக்ரவர்த்தி (முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.), அங்குஷ் ஹஸ்ரா (வங்காள நடிகர்) மற்றும் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை கடந்த சில வாரங்களாக விசாரித்து வருகிறது.

சூதாட்ட நிறுவனத்திடமிருந்து பெற்ற பணத்தில் அவர்களில் சிலர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
இந்த சொத்துக்களை குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானமாக பட்டியலிட்டுள்ள அமலாக்க இயக்குனரகம், அவற்றை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.