புதுடில்லி: சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சூரியகாந்தி, பாமாயிலுக்கு 20% ஆக இருந்த இறக்குமதி வரியை 10 விழுக்காடாக குறைத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இறக்குமதி வரி குறைப்பால், சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.