தங்கவயல்: அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கம் சார்பில் தவணகெரேயில் நவ.8, 9 ஆகிய இரு நாள் மாநாடு நடக்கிறது.இந்த மாநாடு தொடர்பான பிரசார கூட்டம் தங்கவயலில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் ஜனார்த்தன் கூறுகையில், இந்த அமைப்பு உயர் சாதியினருக்கு எதிரான இயக்கம் அல்ல; தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளிலும் எஸ்.சி., – எஸ்.டி., அமைப்புகள் இருப்பது போல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அகில இந்திய அளவில் புதிய இயக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதன் மாநாடு நவம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாவணகெரேயில் நடக்கிறது.கர்நாடகா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கறிஞர் ஜோதிபாசு கூறியதாவது: கல்வி, வேலை வாய்ப்பு, சமூகப் பொருளாதார நிலை ஆகியவற்றில் பின்தங்கிய விளிம்புநிலை மக்களின் உரிமையைக் கோரி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
தேர்தல் நேரத்தில் மட்டும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை குறிவைப்பதை எதிர்க்க இந்த இயக்கம் அவசியம் என்றார். ஹசன் தர்மராஜ், பங்கார்பேட்டை வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய அமைப்பின் தலைவராக தங்கயல் ஸ்ரீகுமார், துணைத் தலைவராக ராஜன், செயலாளராக டேக்கல் அம்பரீஷ், பொருளாளராக புஷ்பராஜ், செயற்குழுவாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.