புது டெல்லி: பிரதமர் மோடிக்கு தமிழ் உட்பட 21 மொழிகளில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்த நிகழ்வில், டெல்லி பள்ளி மாணவர்கள் தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வெளியிட்டார். இந்த வீடியோவில், டெல்லி தமிழ் கல்வி கழக மாணவர்கள் உட்பட பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதமரின் பிறந்தநாளில் நடனமாடி, பாடி, வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி டெல்லியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டெல்லி மாணவர்கள் 21 மொழிகளில் வாழ்த்துப் பாடலைப் பாடினர்.
இந்த வாழ்த்து வீடியோவை டெல்லி கல்வித் துறை தயாரித்தது. பாடல்கள் மூலம் பிரதமரை வாழ்த்திய அனைத்து மாணவர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா கூறினார்.