டெல்லி: டெல்லியில், சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 13 வகையான சிறிய விதிமீறல்களுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த நடைமுறை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது, சிக்னல் மீறல்கள், வேகம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 13 வகையான சிறிய விதிமீறல்களுக்கு டெல்லி முழுமையாக அபராதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த விலக்கு வரும் 13 ஆம் தேதி முதல் தேசிய லோக் அதாலத் மூலம் செயல்படுத்தப்படும்.

மேலும் மாநில போக்குவரத்து காவல்துறை அபராதத்தை முழுமையாகவோ அல்லது 50% வரை குறைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நடைமுறை தமிழ்நாட்டில் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தமிழக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.