ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக செயல்படும் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், “இது வெறும் சட்டமன்ற சம்பிரதாயம் அல்ல, நல்லாட்சியின் பிரதிபலிப்பாகும். ஜம்மு காஷ்மீர் மக்களின் முக்கியமான விருப்பங்களில் ஒன்றான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியல் ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இதன் முக்கியத்துவத்தை அரசு புரிந்துகொண்டுள்ளது. இதற்கான செயல்முறையை எளிதாக்க, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது,” என்றார்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், மக்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருப்பதாக மனோஜ் சின்ஹா கூறினார்.