உத்திரபிரதேசம் : உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்னும் 3 நாட்களில் முடியப் போகிறது. இந்த புனித கும்ப மேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
இந்நிலையில் இந்த மகா கும்பமேளா இன்னும் மூணு நாட்களில் நிறைவடைகிறது. இதனால், நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் புனித நீராட பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர்.
எந்த திசை திரும்பினாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. நதிக்கரை, காசி என பார்க்கும் இடமெல்லாம் மக்கள் தலையாக தெரிகிறது. ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.