உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜம்மு-காஷ்மீர் வழித்தடத்தில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூஞ்ச் மற்றும் ஜம்மு பகுதிகளை இணைக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மெந்தர் செக்டாரில் இருந்து மானிய விலையில் ஹெலிகாப்டர் சேவை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, விமான சேவை நிறுவனங்கள், சாத்தியக்கூறு ஆய்வை நடத்தி வந்தனர். இதனையடுத்து, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மானிய கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிவில் விமானப் போக்குவரத்துச் செயலர் அஜ்சாஜ் ஆசாத் கூறுகையில், “மெந்தரின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து பயணம் மற்றும் அவசரகால மீட்புக்கு வசதியாக ஹெலிகாப்டர் சேவைகளை மானிய விலையில் அனுமதிப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை” என்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஸ்த்வர்-சவுன்டர்-நவபாச்சி, இசான்-கிஸ்த்வர், ஜம்மு-ரஜவுரி-பூஞ்ச்-ஜம்மு, ஜம்மு-தோடா-கிஸ்த்வர்-ஜம்மு உள்ளிட்ட பல பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவைகள் ஏற்கனவே மானிய விலையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பந்திபோரா-கன்சல்வான்-தவார்-நீரி-பந்திபோரா மற்றும் குப்வாரா-மச்சில்-தங்தார்-கேரன்-குப்வாரா வருவது குறிப்பிடத்தக்கது.