இ-காமர்ஸ் நிறுவனங்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், இ-காமர்ஸ் ஆபரேட்டர்களுக்கான டிடிஎஸ் விகிதம் 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அறக்கட்டளைகளுக்கு வரி விலக்கு பெற, ஏற்கனவே உள்ள இரண்டு வரி விலக்கு வகைகளை ஒரே வரி விலக்கு வகையாக மாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயுள் காப்பீட்டு பாலிசி முதிர்வு தொகையில் இருந்து கழிக்கப்படும் டிடிஎஸ் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஆயுள் காப்பீட்டு முகவர்களிடமிருந்து கமிசன் கழிக்கப்படும் டிடிஎஸ் 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.