இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுந்தர்நகர் பகுதியில் உள்ள கியர்கி அருகே 7 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.