புதுடெல்லி: நிதி நிலைத்தன்மை அறிக்கையை நேற்று வெளியிட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், “தொழில்துறையின் தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டில் அதிக நுகர்வோர் இருப்பதால், 2025-ல் பொருளாதாரம் மேம்படும்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறையும் என்றாலும், இரண்டாம் பாதியில் அது வேகமெடுக்கும்,” என்றார். நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கிகளில் வாராக் கடன் 2.6 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை கூறியுள்ளது.