
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வங்கதேச ஊடுருவல்காரர்கள் யாவரும் கண்டறியப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை சத்தீஸ்கர் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் விஜய் சர்மா திங்களன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

கடந்த ஓராண்டில் 850 வங்கதேச ஊடுருவல்காரர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 500 பேர் பஸ்தார் பகுதிகளில் தங்கி இருந்தனர். அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
350 ஊடுருவல்காரர்கள் கவர்தா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, அவர்களையும் நாடு கடத்தப்பட்டனர்.
கொண்டகான் பகுதியில் 46 வங்கதேச ஊடுருவல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துர்க் உள்ளிட்ட பல மாவட்டங்களில், சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாவோயிஸ்டுகள் குறித்தும் கருத்து தெரிவித்த விஜய் சர்மா, அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் சேரும் படி அறிவுறுத்தினார்.
பஸ்தார் ஒலிம்பிக் நிறைவு விழாவில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் இடதுசாரி தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.