அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தந்தை தரிசனம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி ராமர் கோயிலுக்கு எலான் மஸ்க்கின் தந்தை வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க் 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தொழில்முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தும் அவர், ராமர் கோயிலுக்கும் செல்கிறார். இதனால் அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மின்சார வாகன உற்பத்தியில் மஸ்க் கவனம் செலுத்தும் சூழலில், அவருடைய தந்தை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.